Categories
தேசிய செய்திகள்

இனி ரயில்களில் 2 ஸ்லீப்பர் பெட்டிகள் தான்…. தெற்கு ரயில்வே வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் பெரும்பாலும் மக்கள் பாதுகாப்பாக மற்றும் வசதியான பயணத்தை மேற்கொள்ள ரயில் பயணத்தை தேர்வு செய்து வருகின்றனர். ஏனென்றால் அரசு பேருந்து கட்டணங்களை விட ரயில் கட்டணங்கள் குறைவாக இருக்கின்றது. ரயில் பயணம் கட்டணமும், நேர குறைவு என்பதால் ஏழை எளிய மக்கள் ரயில்களை நாடுகின்றனர். கடந்த வருடம் விதிக்கப்பட்ட ஊரடங்கால் வருவாய் சற்று சரிய தொடங்கியது. அதன் பிறகு படிப்படியாக ரயில்கள் இயங்கத் தொடங்கியுள்ளதால் பயணிகளின் வருகையும் அதிகரித்து உள்ளது. இந்நிலையில் ரயில்வே துறை புதிய திட்டம் ஒன்றை கொண்டு வந்துள்ளது. அந்த திட்டத்தின்படி தொலைதூர ரயில்களில் இனி ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகள் இரண்டு மட்டுமே இணைக்கப்படும், மற்ற எல்லா பெட்டிகளும் ஏசி பெட்டிகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பயணிகள் அனைவரும் வேறு வழியில்லாமல் ஏசி பெட்டிகளையே பயணம் செய்ய வேண்டி இருக்கும். இதனால் பயண கட்டணம் உயரும். அதனைத் தொடர்ந்து பாண்டியன், முத்துநகர், மலைக்கோட்டை, சோழன், பொதிகை மற்றும் நீலகிரி உள்ளிட்ட எல்.எச்.பி. விரைவு ரயிலில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ரயில்களில் இனி ஏசி அல்லாத ஸ்லீப்பர் பெட்டிகளுக்கு பதிலாக ஏசி-3 டயர் பெட்டிகளை தெற்கு ரயில்வே இணைக்கும். கடந்த ஜூன் 6-ம் தேதி மற்றும் பிற மண்டலங்களுக்கு ரயில்வே வாரியம் இது குறித்த உத்தரவை வழங்கியது. மேலும் எல்.எச்.பி. ஸ்லீப்பரின் ஒரு பெட்டியில் 80 பயணிகள் பயணம் செய்யலாம். இந்த முறையில் மாற்றம் ஏற்பட்டால் ஸ்லீப்பர் இருக்கையில் எண்ணிக்கை 560 லிருந்து 160 ஆக குறையும் நிலை ஏற்படும்.

Categories

Tech |