குஷ்பு தமிழகத் திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார். கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் குரு பூர்ணிமாவான இன்று தன்னை அரசியலுக்கு அழைத்துவந்த கலைஞருக்கு, பாஜக உறுப்பினரான நடிகை குஷ்பூ நன்றி தெரிவித்துள்ளார். மனிதாபிமானம், சமத்துவம், அரசியல் நயத்தை தனக்கு கற்றுக்கொடுத்தவர் அவர் என்றும் குஷ்பூ நினைவுகூர்ந்துள்ளார். சுயமரியாதையைவிட பெரிய விஷயம் எதுவுமில்லை என அடிக்கடி கூறுவார் கலைஞர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.