ஓப்போ இந்தியா அலுவலகம் அதன் முக்கிய நிர்வாகிகளின் வீடுகளில் வருவாய் புலனாய்வு துறை சோதனை நடத்தியது. அப்போது கைபேசி உற்பத்தி செய்வதற்காக இறக்குமதி செய்யப்பட்ட சில பொருள்களின் விலையை அந்த நிறுவனம் தவறாக குறிப்பிட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மூத்த நிர்வாக பணியாளர்கள் மற்றும் உள்ளூர் விநியோகஸ்தர்களிடம் விசாரணை நடத்தப்பட்ட போது அவர்கள் இறக்குமதியின் போது சுங்க அதிகாரிகளிடம் தவறான தகவல்களை அளித்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். இறுதியில் அந்த நிறுவனம் ரூ.4,389 கோடி சுங்க வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வருவாய் புலனாய்வு இயக்குனரகம் தெரிவித்துள்ளது.
Categories