ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர் புகழேந்தி கூறியதாவது, பொன்னையன் அண்ணனை ஆயிரம் வார்த்தைகளால் பாராட்டலாம், அவர் வாழ்க. நான்கு வருடம் நடந்த பணக்கொள்ளையையும், சாதி வெறியையும் கூறி விட்டார். பொன்னையன் உண்மையைத்தான் பேசி உள்ளார். எடப்பாடி பழனிசாமி தரப்பால்அவர் உயிருக்கு ஆபத்து என்பதால் பாதுகாப்பு தேவை.
ஓ.பன்னீர் செல்வம் விரைவில் புரட்சிப் பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது எடப்பாடி பழனிசாமி உள்பட அவர் பக்கம் உள்ள அனைவரும் சிறையில் இருப்பார்கள். விரைவில் பல ஆடியோக்கள் வெளிவரும். ஓ.பன்னீர் செல்வம் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டால் மட்டுமே எடப்பாடி பழனிசாமியை ஏற்றுக்கொள்வோம். கே.பி. முனுசாமி, ஜெயகுமார் போன்ற ஒரு சிலரால் எடப்பாடி பழனிசாமிக்கு அழிவு வந்து விட்டது இவ்வாறு அவர் கூறினார்.