தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருந்தபோது உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து ஓ பன்னீர் செல்வம் அவர்கள் முதல்வராக பதவியேற்றார். அதன் பிறகு சசிகலா அவர்கள் ஓ பன்னீர்செல்வத்தை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக நியமித்தார். அந்த நான்கு ஆண்டுகள் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தார். அப்போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் புகைப்படம் போடப்பட்டிருந்தது .அந்த புகைப்படம் தற்போது வரை நீக்கப்படாமல் இருந்து விடுகின்றது.
இந்நிலையில் கல்வித்துறை வசம் உள்ள இலவச மடிக்கணினியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படத்தை நீக்க மாவட்ட அதிகாரிகளுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அதிமுக ஆட்சியின் போது பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வந்தது. தற்போது ஆட்சி மாறியதை அடுத்து, கைவசம் உள்ள மடிக்கணினிகளில் கடந்த ஆட்சியின் போது ஒட்டப்பட்ட இபிஎஸ் படங்களை நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது.