Categories
மாநில செய்திகள்

அதிமுகவின் புதிய நிர்வாகிகள்….. பட்டியலை வெளியிட்ட எடப்பாடி பழனிச்சாமி….. யார் யாருக்கு பதவி?….!!!

அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்து அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை அருகே வானகரத்தின் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. அது மட்டுமின்றி கட்சி விதிகளிலும் பல்வேறு திருத்தங்கள் செய்து தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. அதிமுகவில் புதிதாக துணை பொதுச் செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. ஓபிஎஸ் உட்பட அவரது ஆதரவாளர்கள் அனைவரும் அடிப்படை உறுப்பினர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஓபிஎஸ் வகித்து வந்த பொருளாளர் பொறுப்பு அவரிடம் இருந்து தீர்க்கப்பட்டு திண்டுக்கல் சீனிவாசனிடம் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் அதிமுகவில் புதிய நிர்வாகிகள் நியமனம் செய்து அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இதை தொடர்ந்து தற்போது அதிமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்னையன் மற்றும் நத்தம் விஸ்வநாதன், எஸ்பி வேலுமணி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

துணை பொதுச்செயலாளராக கேபி முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கழக தலைமை நிலைய செயலாளராக எஸ்பி வேலுமணி நியமிக்கப்பட்டுள்ளார். அதை தொடர்ந்து, அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக பொன்னையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், செல்லூர் ராஜு, சி.வி.சண்முகம், உள்பட 11 பேர் கழக அமைப்பு செயலாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |