பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகம் முன்பாக கிராம ஊராட்சி தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குனர்கள் நலச்சங்கம் சார்பாக பல கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்கள் போராட்டத்தில் முன்வைத்த கோரிக்கைகள் என்னவென்றால், டேங்க் ஆபரேட்டர்களுக்கு தொகுப்பூதியமாக 250 ரூபாய் வழங்கப்படுகின்றது. இவற்றை மாற்றி சிறப்பு காலமுறை ஊதியம் அல்லது காலம் முறை ஊதியம் வழங்க வேண்டும் எனவும் தூய்மை காவலர்களுக்கு வழங்கப்படும் ரூபாய் 3600 மாத ஊதியத்தை ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் எனவும் தூய்மை பணியாளர்கள் மூன்று வருடங்கள் பணி செய்த பின் அவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் அரசாணை இருக்கின்றது.
ஆனால் இந்த அரசாணை இதுவரை அமல்படுத்தாமல் இருக்கின்ற நிலையில் பணி நிரந்தரம் செய்திட வேண்டும் எனவும் தூய்மை பணியாளர்களுக்கு அறிவித்திருந்த ஓய்வூதியம் இருவரை வழங்கப்படாமல் நிலுவையில் இருக்கின்றதால் அவர்களுக்கு அதை வழங்க வேண்டும் எனவும் முன்களப்பணியாளர்களுக்கு மாதம் 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.