போராட்டத்தின் போது காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்வு, உணவு தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு, மின் துண்டிப்பு போன்ற பல்வேறு விதமான பிரச்சனைகளால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி, மீளா துயரில் இருக்கின்றனர். இதனால் இலங்கைக்கு அமெரிக்கா, இந்தியா உட்பட பல நாடுகள் உதவி கரம் நீட்டி வருகிறது. இந்த அத்தியாவசிய பொருள்களின் தட்டுப்பாட்டின் காரணமாக ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 9-ம் தேதி அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் அதை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளனர்.
இந்த தகவலை முன்கூட்டியே தெரிந்து கொண்ட அதிபர் கோத்தப்பய ராஜபக்சே தன்னுடைய குடும்பத்துடன் மாளிகையை விட்டு வெளியேறி தற்போது மாலத்தீவில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இலங்கை அதிபர் கோத்தப்பய ராஜபக்சே பதவி விலகுவதாக அறிவித்ததால், புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவரை அதிபர் கோத்தப்பய ராஜபக்சே தற்காலிக பிரதமராக தேர்ந்தெடுத்ததாக சபாநாயகர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் பிரதமர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த போராட்டக்காரர்களை தடுப்பதற்காக ராணுவத்தினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டதோடு போராட்டக்காரர்களின் மீது கண்ணீர் புகை குண்டுகளையும் வீசுகின்றனர். இந்த நெருக்கடியான சூழலை சமாளிப்பதற்காக மேற்கு மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டத்தின் போது நடந்த மோதலில் நேற்று 10 பேர் படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நிலையில் இன்று 4 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாக உள்ளது. மேலும் இலங்கை மக்களின் போராட்டத்தினால் அரசியல் குழப்பம் ஏற்பட்டதோடு பதட்டமான சூழல் நீடித்துள்ளது.