தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழை கொளுத்தி வருகிறது. இதனால் கோவை குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கனமழையின் காரணமாக ஒரு சில நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், வால்பாறை தாலுகாவில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Categories