மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் பாஜக மாவட்ட நிர்வாகி ஸ்ரீகாந்த் தேஷ்முக். இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 32 வயது பெண்ணிடம் வேலை வாங்கி தருவதாக கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனை ஆதாரபூர்வமாக நிரூபிக்கும் வகையில், பாதிக்கப்பட்ட அந்த பெண், தனது முகநூல் பக்கத்தில் இது தொடர்பான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், ஸ்ரீகாந்த் தேஷ்முக், தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில், அதற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தது கண்டனங்கள் எழுந்தது. இதையடுத்து, ஸ்ரீகாந்த் தேஷ்முக் மாவட்ட பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். தொடர்ந்து, அந்த பெண்ணுக்கும், தனக்கும் ஏற்கனவே தொடர்பு இருந்ததாகவும், அந்த பெண் தன்னை மிரட்டி பணம் பறிக்க முயற்சித்ததாகவும் காவல்துறையில் ஸ்ரீகாந்த் தேஷ்முக் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
https://twitter.com/i/status/1546904020983328768