அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கடந்த சில மாதங்களாகவே கடும் தலைவலி இருந்துவந்துள்ளது. கடந்த ஆண்டு, கால்பந்து விளையாடிக் கொண்டிருந்த அவர், திடீரென்று மயங்கி விழுந்தார். அப்போது மருத்துவமனையில் அவருக்கு எம்.ஐ.ஆர். ஸ்கேன் எடுக்கப்பட்டது.
ஸ்கேனில் அவரது தலைக்குள் நாடா புழு இருந்ததைக் கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். தலைக்குள் இருந்த நாடா புழுவை அகற்ற, மிகவும் சிக்கலான அறுவைச் சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது.
அறுவைச் சிகிச்சையில் அவரது தலைக்குள் இருந்த நாடா புழு வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இதுகுறித்து, மருத்துவர்கள் கூறுகையில், “இது மிக மிக அரிதான சம்பவம். மிக மிக சிலருக்கு மட்டுமே நாடா புளுக்கள் மூளைக்குச் செல்லும்” என்றார்.
பாதிக்கப்பட்டவர் குறித்த தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட மறுத்துவிட்டது. கடந்த ஆண்டு, தான் மெக்சிகோ சென்றிருந்தபோது உண்ட பன்றி கறி மூலம், இந்த புழு வந்திருக்கலாம் என்று பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து, மருத்துவர் ஒருவர் விளக்குகையில், “முறையாக சமைக்கப்படாத மாட்டுக் கறியையும், பன்றிக் கறியையும் உண்டால், இதுபோல் ஏற்பட வாய்புள்ளது. நாடா புழு இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு அதற்கு சிகிச்சை தேவைப்படாது. புழு அதுவாகவே வெளியே வந்துவிடும்” என்றார்.