பிரபல நடிகர் பரத் நடிக்கும் புதிய படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிசியான நடிகர்களில் ஒருவராக மாறிவரும் நடிகர் பரத் தற்போது ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை சுனில் குமார் இயக்க, அனூப் காலித் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் மற்றும் மலையாளம் என 2 மொழிகளில் உருவாகியுள்ள ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ படம் வெவ்வேறு துறைகளில் பணியாற்றும் 4 பேரின் வாழ்க்கையை ஒன்றாக இணைக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படம் வருகிற ஆகஸ்ட் 4-ஆம் தேதி திரையரங்கில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.