இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியில் தொடர் வைப்பு நிதி திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை தற்போது உயர்த்தியுள்ளது. அதன்படி புதிய வட்டி விகிதங்கள் இன்று (ஜூலை 14ஆம் தேதி) முதல் அமலுக்கு வருகின்றன. பொது வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அல்லாமல் சீனியர் சிட்டிசன்களுக்கும் இந்த வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.
புதிய வட்டி விகிதத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 2.90 சதவீதம் முதல் 5.5 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகின்றது. மேலும் பொது வாடிக்கையாளர்களை பொறுத்தவரையில் சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக ஜீரோ 0.50 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது.மேலும் சீனியர் சிட்டிசன்களுக்கு 3.40 சதவீதம் முதல் 6.40 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுவதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது.
புதிய வட்டி:
7 – 45 நாட்கள் : 2.90%
46 – 179 நாட்கள் : 3.90%
180 – 210 நாட்கள் : 4.40%
211 நாட்கள் – 1 ஆண்டு : 4.60%
1 ஆண்டு – 2 ஆண்டு : 5.30%
2 ஆண்டு – 3 ஆண்டு : 5.35%
3 ஆண்டு – 5 ஆண்டு : 5.45%
5 ஆண்டு – 10 ஆண்டு: 5.50%