நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் அட்டை மூலமாக மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு அவசியம். கொரோனா காரணமாக தவிக்கும் மக்களுக்கு உதவ மத்திய அரசு ” பிஎம் கரீப் கல்யாண் யோஜனா” என்ற திட்டத்தை செயல்படுத்தியது.
அந்தத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு பயனாளிகள் மற்றும் ஆதார் கார்டு மூலமாகவும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். ரேஷன் கார்டு மூலமாக இலவச உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் நிறைய பேருக்கு உதவி கிடைக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து எங்கே புகார் கொடுப்பது யாரிடம் உதவி கேட்பது என்று பயனாளிகளுக்கு தெரிவதில்லை.
இதனால் இலவச ரேஷன் பொருட்களை வாங்காமல் அப்படியே விட்டு விடுகின்றன. ஒருவேளை மத்திய அரசின் இலவச ரேஷன் திட்டத்திற்கு நீங்கள் தகுதி உடையவராக இருந்தோம் இந்த திட்டத்தின் பலனை பெற முடியவில்லை என்றால் அல்லது இலவச ரேஷன் பெறுவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். வீட்டிலிருந்தபடியே எளிதில் ஆன்லைன் மூலமாக புகார் அளிக்கலாம். அதன் மூலமாக இலவச ரேஷன் உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்.
உங்களுக்கு ரேஷன் கிடைக்காத பட்சத்தில் இணையதளம் மற்றும் மின்னஞ்சல் மூலமாக ஆன்லைனில் புகார் அளிக்கலாம். இதனைத் தவிர புகார் அளிப்பதற்கு ஹெல்ப்லைன் நம்பருக்கு போன் செய்யலாம். மின்னஞ்சல் மூலமாக புகார் அளிக்க உங்கள் புகாரை எழுதி உங்கள் ரேஷன் கார்டு என்னுடன் ரேஷன் டிப்போ வின் பெயரையும் உள்ளிட வேண்டும். அவ்வகையில் புகார் கொடுப்பதற்கான இலவச எண்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.