Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு செம குட் நியூஸ்…. IRCTC அடுத்த பிளான் இதுதான்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

ரயில்வே டிக்கெட் மற்றும் கேட்டரிங் சேவைகளை பயணிகளுக்காக வழங்கியவரும் ஐ ஆர் சி டி சி நிறுவனம் சமீபத்தில் சுற்றுலாவில் அதிகம் கவனம் செலுத்தியுள்ளது. அதன்படி நாடு முழுவதும் பட்ஜெட் ஹோட்டல்களை அமைக்க ஐ ஆர் சி டி சி திட்டமிட்டுள்ளது. சுற்றுலா பயணங்களுக்கு செல்லும்போது ஹோட்டல்கள் போன்ற தங்கும் இடங்கள் அனைத்தும் மிக அவசியமாக உள்ளன.

இந்நிலையில் மிக குறைந்த கட்டணத்தில் தங்கும் இடம் வசதிகளை வழங்கும் நோக்கத்தில் நாடு முழுவதும் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் பட்ஜெட் ஹோட்டல்களை அமைப்பதற்கு ஐ ஆர் சி டி சி நிறுவனம் புதிதாக திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி முதற்கட்ட பணிகளுக்காக 500 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு மாநில அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் திட்டங்கள் குறித்து மாநில அரசுகளிடம் முன்மொழிதலும் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கோஹீமாவில் ஐ ஆர் சி டி சி நிறுவனத்தின் பட்ஜெட் ஹோட்டல் இறுதி கட்ட பணிகளை எட்டி உள்ளது. அதுமட்டுமல்லாமல் கஜூராஹோவில் ஐ ஆர் சி டி சி ஹோட்டல் இந்த வருடம் இறுதிக்குள் முடிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது மட்டுமல்லாமல் குஜராத், அயோத்தி, பனாரஸ் மற்றும் லக்னோ ஆகிய இடங்களிலும் பட்ஜெட் ஹோட்டல்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Categories

Tech |