சென்னை சாலிகிராமம் , நீலாங்கரையில் உள்ள விஜயின் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் வீட்டுக்கு சொந்தமான வீடு , அலுவலகம் என்று காலையில் இருந்து வருமான பரிசோதனை சோதனை நடந்து கொண்டிருக்கிறது. பிகில் திரைப்படம் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல் தெரியவந்துள்ளது. பிகில் படத்தில் நடித்த விஜய்யிடம் நேரடியாக சென்று வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருக்கிறார்கள்.
நெய்வேலியில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற வருமானவரித்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நேரடியாக விசரனை நடத்தி சென்னை அழைத்து வந்து விசாரித்து முடிவு செய்கிறார்கள்.இதற்கிடையில் சாலிகிராமத்தில் இருக்கக்கூடிய விஜய்யின் பழைய வீட்டில் , தற்போது அந்த வீட்டில் வேறொருவர் குடியிருக்கின்றார்.
அந்த வீட்டில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல நீலாங்கரை வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகின்றது. தற்போது சாலிகிராமத்தில் உள்ள விஜயின் வீடு மற்றும் அங்கு இருக்கக்கூடிய அலுவலகத்திலும் சோதனை நடத்தப்படுவதாக தெரியவந்துள்ளது.