Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. இதை யாரும் நம்பாதீங்க…. PIB வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துள்ளவர்களுக்கு முக்கியமான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் மத்திய அரசு 5 ஆயிரம் ரூபாய் தருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி வைரலாக பரவியது. கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் ஒரு படிவத்தை நிரப்பினால் மட்டும் அரசாங்கம் அவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் முழுவதுமாக வழங்கும் என்று கூறப்பட்டது.

இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில் பல வகையான தகவல்கள் பரப்பப்படுகின்றன. அவையெல்லாம் உண்மையாக இருக்கலாம் அல்லது போலியாக இருக்கலாம். உண்மையில் தடுப்பூசி போட்ட பிறகு ஐந்தாயிரம் ரூபாய் பெறலாம் என்ற இந்த தகவலின் உண்மையை கண்டறிய PIB உண்மை சரிபார்ப்பை மேற்கொண்டது. அதில் இந்தச் செய்தி முற்றிலும் வதந்தி என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பி ஐ பி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ டிவிட்டர் பதிவில், கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு ஆன்லைன் படிவத்தை பூர்த்தி செய்த பிறகு மத்திய அரசு மூலமாக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று வெளியான செய்தி போலியானது.

தயவுசெய்து இது போன்ற போலீஸ் செய்தியை யாருக்கும் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. இது போன்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது போன்ற செய்திகளால் தவறாக வழிநடத்தப்படுவதுடன் மூலம் உங்கள் தனிப்பட்ட தகவல் திருடப்பட்டு பணம் மோசடி செய்யப்படலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |