சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தவறாமல் முககவசம் அணிய வேண்டும், முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. அந்தவகையில் கடந்த 6ம் தேதி முதல் 12ம் தேதி வரை மாநகராட்சி குழுக்களின் மூலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் அணியாத 2 ஆயிரத்து 340 பேரிடம் இருந்து ரூ.11 லட்சத்து 70 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டது. அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்து 500ம், அண்ணாநகரில் ரூ.1 லட்சத்து 26 ஆயிரமும், ராயபுரத்தில் ரூ.1 லட்சத்து 9 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப்பட்டு உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.