கனடா நாட்டில் ஐந்து நபர்களுக்கு புதிய வகை கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் புதிய வகையான பிஏ.2.75, ஜெர்மன், அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் பரவியது. இந்நிலையில் இந்த புதிய வகை கொரோனா கனடா நாட்டிலும் பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி கனடா நாட்டின் சுகாதாரத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்ததாவது, கனடாவில் கடந்த 6-ஆம் தேதி தொடக்கத்தில் 5 நபர்கள் இந்த புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த வைரஸ் குறித்து தெளிவு கிடைக்கும் போது பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை மாறுபட வாய்ப்புள்ளது என்று கூறியிருக்கிறார்.