Categories
உலக செய்திகள்

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்கள்…. கருத்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்….!!

இலங்கை நாட்டிலிருந்து  அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி செல்வார் என நினைக்கவில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா கூறியுள்ளார்.

இலங்கை நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, உணவு, எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை போன்றவை மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் நிதி நெருக்கடியால், உணவு, மருந்து மற்றும் எரிபொருள் போன்றவற்றை விலை கொடுத்து வாங்க முடியாத சூழ்நிலைக்கு இலங்கை மக்கள் தள்ளப்பட்டுள்ளது. இலங்கையின் அண்டை நாடான இந்தியா உரம், மருந்து போன்ற பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டி வருகின்றது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சூழலால் மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர். இதனால் இலங்கையில் பல மாதங்களாக போராட்டம் நீடித்து கொண்டிருக்கிறது. இச்சூழ்நிலையில் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்த 9ந்தேதி இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து கொழும்புவில்  உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினர். இருப்பினும் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபய ராஜபக்சே தனது  குடும்பத்துடன் தப்பி சென்று விட்டார். அவர் எங்கிருக்கிறார் என தெரியாத நிலையில், கோத்தபய  ராஜபக்சே தனது  குடும்பத்துடன் மாலத்தீவுக்கு நேற்று அதிகாலை ராணுவ விமானத்தில் தப்பி சென்று விட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யா கூறியதாவது, “இலங்கையிலிருந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தப்பி செல்வார் என நினைக்கவே இல்லை என்று தெரிவித்துள்ளார். இதுபோன்று நடக்கும் என ஒருபோதும் நான் நினைக்கவில்லை. அவர் பதவி விலகி நாட்டிலேயே தொடர்ந்து இருப்பார் என நாங்கள் நினைத்தோம். துரதிர்ஷ்டவசத்தில் அது நடக்கவில்லை. இலங்கையிலிருந்து நேற்று காலை மாலத்தீவுக்கு சென்று விட்டார். கடந்த சில மாதங்களாக எரிபொருள், மின்சாரம், கியாஸ் மற்றும் சுகாதார நெருக்கடியை இலங்கைவாசிகள் சந்தித்தனர். நீண்டகாலம் அனைத்து நெருக்கடிகளையும் எதிர்கொண்ட மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.  இலங்கை மக்களுக்கு வாழ்க்கை கடினம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |