Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெண்ணிடம் ஆபாச பேச்சு…. சரமாரியாக வெட்டி கொல்லப்பட்ட தொழிலாளி…. போலீஸ் நடவடிக்கை…..!!!!!

சென்னை தாம்பரத்தை அடுத்த பல்லாவரம், பெரிய பாளையத்தம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவர் சிரஞ்சீவி (24). பொழிச்சலூர் விநாயகா நகரில் வசித்து வருபவர் பாண்டியன் (45). இவர்கள் 2 பேரும் பம்மல், நாகல்கேணியிலுள்ள மீன் மார்க்கெட்டில் மீன்வெட்டும் வேலை செய்துவந்தனர். இந்நிலையில் சென்ற 10ஆம் தேதி இரவு பாண்டியன், சிரஞ்சீவியின் வீட்டிற்கு சென்று அவரது மனைவியை கத்தியை காட்டி மிரட்டி ஆபாசமாக பேசி இருக்கிறார்.

இதனை அறிந்த சிரஞ்சீவி நேற்று முன்தினம் இரவு அவருடைய நண்பர் ஹரிகரன் (26) என்பவருடன் மது போதையில் பாண்டியன் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டார். இதற்கிடையில் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பாண்டியனின் இடத பக்க விலா மற்றும் தலையில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் பலத்த காயமடைந்த பாண்டியனை அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட  பின்  அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் பாண்டியன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனிடையில் தப்பியோடிய சிரஞ்சீவியை பொதுமக்கள் மடக்கி பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து தலைமறைவாக இருந்த ஹரிகரனையும் காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பாக சங்கர்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |