Categories
உலக செய்திகள்

பிரதமர் அலுவலகத்தை மீட்க களம் இறங்கிய ராணுவம்…. எதிர்த்து நிற்கும் போராட்டக்காரர்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு…!!!

இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டினர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார்.

இதனையடுத்து போராட்டக்காரர்கள் வருவதற்கு முன் கோத்தபயா குடும்பத்துடன் தப்பித்து சென்று ஓடிவிட்டார். மேலும் இலங்கையில் நாடாளுமன்றத்தை முற்றுகையிடும் முயற்சியில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று காலை பிரதமர் அலுவலகத்தின் கட்டுப்பாட்டை ராணுவம் மீண்டும் பெற முயற்சித்த போதிலும் போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தில் நீடிக்க முடிந்தது என்று கோட்டை கோட்ட கம செய்யற்ப்பாட்டாளர் கஸ்ஸப தேரர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |