Categories
மாநில செய்திகள்

ரூ. 100 கோடி மதிப்பில்…. சென்னையில் வரப்போகும் அசத்தல் திட்டங்கள்…. மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு….!!!

சென்னையில் வரப்போகும் திட்டங்கள் குறித்து மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் தலைநகர் சென்னை 2.0 என்ற திட்டத்தின் கீழ் பல்வேறு சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்ட துவக்கமாக 5 இடங்களில் மெகா ஸ்ட்ரீட் என்ற கட்டமைப்பை ஏற்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  இந்த பணிகளை தொடங்குவதற்கு வேளச்சேரி எம்ஆர்டிஎஸ் நிலையத்திற்கு அருகே உள்ள பகுதி, கிண்டி ஸ்டேஷன் அருகே உள்ள ரேஸ் கோர்ஸ் ரோடு, எம்சி ரோடு, அருணாச்சலம் லூப் ரோடு, திருவொற்றியூர் ஹை ரோடு, காதர் நவாஸ் கான் ரோடு ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காதர் நவாஸ் கான் ரோடு மற்றும் எம் சி ரோடு ஆகிய பகுதிகளில் பேருந்து நிலையம், புறநகர் ரயில், மெட்ரோ ரயில் போன்றவற்றை உள்ளடக்கிய மல்டி மாடல் திட்டத்தை செயல்படுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக 15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், டெண்டர் பணிகள் நடப்பு மாதத்தில் தொடங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் பல்வேறு காரணங்களால் திட்டம் தள்ளிப் போவதோடு, எம்சி ரோடு பகுதியில் 2.16 கோடி ரூபாய் மதிப்பில் பிளாசா அமைப்பதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான திட்டம் உருவாக்கப்பட்டாலும் நிதியை ஒதுக்குவதில் சிக்கல் உள்ளது. இந்தத் திட்டங்கள் அமலுக்கு வந்தால் காதர் நவாஸ் ரோடு சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருக்கும். அதன் பிறகு வடிவமைப்பு திட்டங்களுக்கு மாநகராட்சி மண்டல துணை ஆணையரிடம் ஒப்புதல் வாங்க வேண்டும்.

இதைத் தொடர்ந்து வாஷர்மேன்பேட்டை பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் சாலைகளை மேம்பாலம் மூலம் இணைக்கும் பணி முடிவடைந்தால் எளிதில் இணைப்புகள் உருவாக்கப்படும் என்றும், எம் ஆர் டி எஸ் நிலையத்தில் மெகா சாலை திட்டம் கொண்டு வரப்பட்டால் அடுத்த கட்ட வளர்ச்சி பாதைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் மெகா ஸ்ட்ரீட் திட்டம் தொடர்பான திட்ட அறிக்கையை ஷிவ் தாஸ் மீனா தலைமையிலான குழு சரி பார்த்து ஒப்புதல் வழங்கிய பிறகு, தமிழக அரசிடம் காண்பிக்கப்பட்டு நிதி உதவி பெறப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

Categories

Tech |