Categories
மாநில செய்திகள்

மருத்துவமனையில் முதல்வர்….. வெளியானது மருத்துவ அறிக்கை ….!!!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சி.டி.ஸ்கேன் மருத்துவ பரிசோதனைக்கு சென்ற நிலையில் முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள மருத்துவ அறிக்கையில், ‘கொரோனா நோய் தொற்று அறிகுறி காரணமாக மருத்துவ பரிசோதனை மற்றும் கண்காணிப்பிற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,’ என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வீட்டு தனிமையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருந்து வந்த நிலையில், தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Categories

Tech |