Categories
உலக செய்திகள்

கை கொடுங்க… கண்டுகொள்ளாத டிரம்ப்… கிழித்தெறிந்த சபாநாயகர்..!!

அமெரிக்க அதிபர்  டிரம்ப்பின் பிரதியை (நகலை) எடுத்து நான்சி பெலோசி கிழித்து விட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவின்  வாஷிங்டனில் இருக்கும் கேபிட்டல் கட்டிடத்தில், செனட் சபை மற்றும் பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் அடங்கிய பாராளுமன்ற கூட்டுக் கூட்டம்  (ஸ்டேட் ஆப் தி யூனியன்) நடைபெற்றது. இதில் அதிபர் டொனால்டு டிரம்ப் 3-ஆவது முறையாக உரையாற்றினார்.

Image result for tears up of State of the Union speech"

சுமார் ஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் ட்ரம்ப் உரையாற்றினார். இந்த உரையின் போது,  பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி (Nancy Pelosi) அவருக்குப் பின்னால் அமர்ந்திருந்தார். முன்னதாக உரையை தொடங்கபோகும் போது நான்சி பெலோசி கைகுலுக்குவதற்கு ட்ரம்பிடம் கையை நீட்டினார். ஆனால் அதிபர் டிரம்ப் அதனை மறுத்து கண்டும் காணாமல் உரையை வாசித்தார்.

Image result for tears up of State of the Union speech"

இதனால் டிரம்ப் உரையாற்றி முடித்த பின், எழுந்து நின்று தனது மேஜையில் இருந்த டிரம்ப் பேச்சின் நகலை எடுத்த நான்சி பெலோசி கிழித்து விட்டார். அதிபர் டிரம்பிட்க்கு இந்த செயல் பதிலடியாக இருந்தது. ஆனால் இந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Image result for tears up of State of the Union speech"

குடியரசு கட்சியினர் நான்சியின் செயலை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது. டிரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் செனட் சபையில் நிறைவேற்றப்பட்டதில் மிக முக்கிய பங்கு வகித்தவர் நான்சி பெலோசி என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |