Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பணிகள் நடைபெறாமல் இருப்பது ஏன்?…. போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

உடனடியாக சாலை அமைக்க வேண்டும் என கூறி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம்  பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள ராமநத்தம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  இந்த கிராமத்திலிருந்து ஆலம்பாடி  கிராமம் வரை 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் கடந்த 5  மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. ஆனால் எவ்வித பணிகளும் நடைபெறாமல் சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. இதனால் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே சாலையை உடனடியாக அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து விட்டனர்.

ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று ராமநத்தம்-விருதாச்சலம் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு  விஜயகுமார், வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன் உள்ளிட்ட  அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை  தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |