பரிவஹன் சேவா இணையதளம் மற்றும் டிஜிலாக்கர் இணையதளத்திலிருந்து உங்கள் ஓட்டுநர் உரிமத்தை டிஜிட்டல் முறையில் பெற முடியும். மற்ற ஆவணங்களையும் போல இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் DigiLocker மொபைல் அப்ளிகேஷனுடன் உங்கள் ஓட்டுநர் உரிமத்தையும் சேமிக்க முடியும். டிஜி லாக்கரில் சேர்க்கப்படும் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம், செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமத்துடன் நடப்பது போன்றது.
டிஜிலாக்கர் செயலியில் இருந்து ஓட்டுநர் உரிமத்தைப் பதிவிறக்குவது எப்படி?
1: டிஜிலாக்கர் மொபைல் செயலியை பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கவும்.
2 : ‘உங்களுக்குத் தேவையான ஆவணங்கள்’ பகுதிக்குச் செல்லவும்
3: ‘டிரைவிங் லைசென்ஸ்’ விருப்பத்தை கிளிக் செய்யவும்
4 : விருப்பங்களின் பட்டியலிலிருந்து “சாலை மற்றும் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சகம்” என்பதைக் கிளிக் செய்யவும்
5: ‘ஓட்டுனர் உரிம எண்ணை’ உள்ளிடவும்
6 “‘ஆவணங்களைப் பெறு’ விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்
7 : ஓட்டுநர் உரிமத்தை பதிவிறக்கம் செய்து சேமிக்கவும்.