நாட்டில் விலைவாசி உயர்வு காரணமாக பொதுமக்களுக்கு அரசு பல நிவாரணங்களை வழங்கி வருகிறது. அதன்படி ஆண்டுதோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச எல்பிஜி சிலிண்டர்கள் வழங்கி நிதி நெருக்கடியில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவதை அரசு நோக்கமாகக் கொண்டு புதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்தை உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது. அரசின் திட்டப்படி அந்தியோதயா கார்டுவைத்திருப்பவர்களுக்கு வருடத்திற்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக மாநில அரசு 55 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
இலவச எல்பிஜி சிலிண்டர் தவிர முந்தைய ஆண்டுகளில் கோதுமை வாங்கும்போது விவசாயிகளுக்கு ஒரு குவின்டாலுக்கு இருபது ரூபாய் போனஸ் தொடரவும் அமைச்சரவை முடிவு செய்தது. ஆனால் ஒவ்வொரு வருடமும் மூன்று எல்பிஜி சிலிண்டர்களை இலவசமாக பெற சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது அவசியம். அதாவது பயனாளிகள் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும். அந்தியோதயா ரேஷன் கார்டு வைத்திருக்க வேண்டும்.
இந்த ரேஷன் கார்டு வைத்திருப்பவர் அதை எரிவாயு இணைப்பு அட்டையுடன் இணைத்து இருக்க வேண்டும். உத்தரகாண்ட் அரசால் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தை பெற விரும்பினால் இந்த மாதத்தில் அதாவது ஜூலை மாதத்திலேயே உங்களது அந்தியோதயா கார்டை எல்பிஜி இணைப்பு அட்டையுடன் இணைக்க வேண்டும். அந்த இரண்டையும் இணைக்கவில்லை என்றால் அரசின் இந்த இலவச சிலிண்டர் திட்டத்தை பெற முடியாது.