கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள என்.எஸ்.ஆர் கல்லூரி மைதானத்தில் டி.என். பி.எல் தொடர் நடைபெறுகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் திருப்பூர் தமிழன்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியினர் மோதினர். இந்த மேட்சில் 20 ஓவர் இலக்குடன் ஆடிய திருப்பூர் தமிழன்ஸ் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. இதனால் 136 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேலம் அணி களமிறங்கியது. ஆனால் 19.2 ஓவரில் 103 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக திருப்பூர் அணியினர் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்த மேட்சில் திருப்பூர் கேப்டன் அனிருதா 22 பந்தில் 32 ரன்களும், அரவிந்த் 25 ரன்களும், பாப்னா 29 ரன்களும் எடுத்தனர்.
இதனையடுத்து ரவி கார்த்திகேயன் 25 பந்தில் 36 ரன்கள் எடுத்திருந்தார். இதனால் நடைபெற்ற 4 ஆட்டத்தில் 2 வெற்றி 2 தோல்வி என 5-வது இடத்தில் இருக்கிறது. இந்த வெற்றியின் காரணமாக திருப்பூர் கேப்டன் அனிருதா பவுலர்களை பாராட்டியுள்ளார். மேலும் சேலம் அணியினர் தொடர்ந்து 4 தோல்வியை சந்தித்துள்ளதால், கேப்டன் முருகன் அஸ்வின் நாங்கள் என்ன தவறு செய்தோம் என தெரியவில்லை என்றும், சரியான பார்ட்னர்ஷிப் இல்லை எனவும், தவறை உணர்ந்து விளையாட வேண்டிய நேரம் எனவும் கூறியுள்ளார். அதன்பிறகு நாளை நெல்லை ராயல் கிங்ஸ் அணியினருக்கும் திருச்சி வாரியர்ஸ் அணியினருக்கும் இடையே போட்டி நடைபெறுகிறது.