தொடர் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்துவரும் நிலையில், அங்கு 12 முதல் 20 செ.மீ அளவு மிக பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ள இந்திய வானிலை மையம், அம்மாவட்டத்துக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது. இதனால் அம்மாவட்டத்தில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Categories