Categories
உலக செய்திகள்

இலங்கையில் நீடிக்கும் பதற்றம்…. போராட்டக்காரர்கள் எடுத்த முடிவு….. லீக்கான தகவல்…..!!!!!

இலங்கை நாட்டில் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியானது அந்நாட்டின் 2 கோடியே 20 லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது. பொருளாதார நெருக்கடியால் அரசுக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்து அதிபர் மற்றும் பிரதமரின் மாளிகை, அலுவலகங்களை கைப்பற்றி இருக்கின்றனர். மக்களின் போராட்டத்தை அடுத்து நாடு முழுதும் அவசர நிலை பிரகடனம் செய்து இடைக்கால அதிபர் ரணில் விக்கிரம சிங்கே உத்தரவு பிறப்பித்திருந்தார். அத்துடன் சட்டம் – ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில், அந்நாட்டு அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் அலுவலகங்களிலிருந்து வெளியேற போராட்டக்காரர்கள் முடிவு செய்து உள்ளனர். உரியதரப்பிடம் அரசு அலுவலகங்களை ஒப்படைக்க போராட்டக்காரர்கள் தீர்மானித்து இருக்கின்றனர். இதன் காரணமாக போராட்டகாரர்கள் எப்போது வேண்டுமானாலும் அலுவலகங்களிலிருந்து வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டுவர இன்று பகல் 12 மணிமுதல் நாளை மாலை 5 மணிவரை தலை நகர் கொழும்புவில் ஊரடங்கை அமல்படுத்தி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |