மத்திய சுகாதாரத்துறை அதிகாரி அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளாவிற்கு வந்த நபருக்கு புதிய வகை வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவருக்கு குரங்கம்மை அறிகுறிகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இவர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சையில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியுள்ளார். இந்நிலையில் குரங்கம்மை அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபரிடம் இருந்து மாதிரிகள் எடுக்கப்பட்டு புனேவில் உள்ள தேசிய வைரலாஜி மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன் அறிக்கை வந்த பிறகு குரங்கம்மை பாதிப்பு இருக்கிறதா என்பது தெரியவரும். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் அனைத்து மாநில சுகாதாரத் துறை செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் வைரஸ் தொற்று குறித்து பரிசோதனை செய்யும் குழுக்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அதன் பிறகு பொது அறிகுறிகள் மற்றும் வைரஸ் அறிகுறிகள் பற்றி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள், நோய் கண்காணிப்பு குழுக்கள் ஆகியவற்றை எப்போதும் கண்காணித்து முக்கிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கூறியுள்ளார். மேலும் கடந்த 13-ஆம் தேதி எடுத்த ஆய்வறிக்கையின் படி உலகம் முழுவதிலும் 10,400-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது தெரியவந்துள்ளது. இந்த வைரஸ் தொற்றானது சுமார் 60 நாடுகளில் இருக்கிறது.