சேற்றில் வழுக்கி விழுந்து யானை இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள எண்ணமங்கலம் காப்புக்காடு, குரும்பனூர் சரக பகுதியில் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது யானை ஒன்று இறந்து கிடந்ததை பார்த்த வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற அதிகாரிகள் மற்றும் எண்ணமங்கலம் உதவி கால்நடை மருத்துவர் அருள்முருகன் ஆகியோர் இறந்து கிடந்த யானையை பார்வையிட்டு பிரேத பரிசோதனை செய்துள்ளனர்.
இதுகுறித்து டாக்டர் அருள் முருகன் கூறியதாவது, இறந்து கிடப்பது 20 முதல் 30 வயதுடைய பெண் யானை ஆகும். சேற்றில் வழுக்கி விழுந்ததால் யானைக்கு காயம் ஏற்பட்டு அதிர்ச்சியில் மூச்சுத்திணறால் இறந்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். இதனை அடுத்து யானையின் கோரைப்பற்கள் அகற்றப்பட்டு சென்னம்பட்டி வனச்சரக அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பின்னர் யானையை குழிதோண்டி அதே இடத்தில் புதைத்தனர்.