Categories
சினிமா தமிழ் சினிமா

விஜய் இல்லாமல் நடைபெற்ற சதாபிஷேகம்…. விமர்சனம் செய்த நெட்டிசன்ஸ்…. விளக்கம் அளித்த எஸ்.ஏ.சி….!!!!!

தனது பிறந்தநாள் விழாவில் விஜய் பங்கேற்காதது குறித்து எஸ்ஏசி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் விஜயின் தந்தையும் ஆவார். இவருக்கும் விஜய்க்கும் மக்கள் இயக்கம் தொடர்பாக பிரச்சனை காரணமாக மனக்கசப்பு ஏற்பட்டது. மேலும் விஜய், தனது அனுமதி இல்லாமல் மக்கள் இயக்கத்தினை தனது புகைப்படம் மற்றும் பெயரை பயன்படுத்த கூடாது என வழக்கு தொடர்ந்தார்.

இந்த நிலையில் தந்தையின் பிறந்த நாள் விழாவில் விஜய் கலந்து கொள்ளாததால் நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்தனர். மேலும் சதாபிஷேக விழாவில் விஜய் பங்கேற்காததால் பலர் விமர்சனம் செய்தார்கள். இந்த நிலையில் இது பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, நடிகர் விஜய் தற்போது ஹைதராபாத்தில் பிஸியாக ஷூட்டிங்கில் இருப்பதால் அவரால் நேரில் தன்னுடைய பிறந்தநாளுக்கு வர முடியவில்லை.

தந்தை மற்றும் மகனுக்கும் இடையே சில பர்சனல் விஷயங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் பொதுவில் கூறமுடியாது. என்னுடைய பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் விஜய் ஒரு மாஸ் ஹீரோ. நான் போனதுக்கே திருக்கடையூரில் நல்ல கூட்டம் விஜய் வந்திருந்தார்கள். அவர் வந்திருந்தா என்னவாகி இருக்கும். நாங்கள் சந்தோஷமாக பிறந்த நாளை கொண்டாடினோம். காதலித்து கரம்பிடித்த மனைவி ஷோபாவுடன் மனநிறைவாக பிறந்தநாளை கொண்டாடினேன் என கூறியுள்ளார்.

Categories

Tech |