Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ஒரே பள்ளியில் 33 பேருக்கு கொரோனா….. பெரும் அதிர்ச்சி சம்பவம்…..!!!!

தமிழகத்தில் கட்டுக்குள் இருந்த தொற்றுப் பரவல் கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் தமிழக அரசு தொற்று பரவலை கட்டுப்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பொதுமக்கள் வெளியில் சென்றால் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், கூட்டமாக உள்ள இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி வருகிறது. மேலும் பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்கள் முக கவசம் அணிய வேண்டும் .

பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு வெப்பநிலை பரிசோதனை செய்ய வேண்டும். வகுப்பறைகள் காற்றோட்ட வசதியுடன் இருக்க வேண்டும் என பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்நிலையில் தேனி அருகே பழனி செட்டிபட்டி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் 33 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பள்ளிக்கு தற்காலிகமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் தற்போது 183 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |