Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மருத்துவமனை ஊழியர் படுகொலை…. கள்ளக்காதலியின் பரபரப்பு வாக்குமூலம்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

மருத்துவமனை ஊழியரை கள்ளக்காதலி கொடூரமாக குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி பெருமாள்புரத்தில் இ.எஸ்.ஐ மருத்துவமனை அமைந்துள்ளது. நேற்று மாலை ஒரு பெண் அவசர உதவி தொலைபேசி எண்ணான 100-ஐ தொடர்பு கொண்டு போலீசாரை உடனடியாக அனுப்பி வையுங்கள். மருத்துவமனையில் பெரிய பிரச்சனை என கூறியுள்ளார். அந்த தகவலின் படி போலீஸ் ஏட்டு ஒருவர் அங்கு சென்று பார்த்தபோது ரத்தக்கரை படிந்த சேலையை கட்டிய ஒரு பெண் அங்கு நின்றார். அவர் என்னை நம்ப வைத்து ஏமாற்றிய மருத்துவமனை ஊழியரை கொன்று அறையில் போட்டுள்ளேன் என கூறியுள்ளார்.

இதனைக் கேட்டதும் அதிர்ச்சடைந்த போலீஸ்காரர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்ட அந்த நபரின் உடலை பார்வையிட்டனர். இதனை அடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அந்த நபர் மருத்துவமனையில் உதவியாளராக வேலை பார்த்த ரதீஷ்குமார்(35) என்பதும், அந்தப் பெண் மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஷிபா(36) என்பதும் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து போலீசார் அந்த பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. எனக்கு மேக்சன் என்ற கணவரும், இரண்டு பெண் குழந்தைகளும் இருக்கின்றனர்.

கடந்த 2013-ஆம் ஆண்டு எனக்கு ரதீஷ்குமாருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் உனது கணவரை விவாகரத்து செய்துவிடு. நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம் என ரதீஷ்குமார் தெரிவித்தார். அதன்படி எனது கணவரை விவாகரத்து செய்தேன். ஆனால் ரதீஷ்குமார் என்னை ஏமாற்றி எனக்கு தெரியாமல் ஒரு பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு திருமணம் செய்தார். இது குறித்து கேட்டபோது குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த பெண்ணை திருமணம் செய்ததாகவும், அவரை விவாகரத்து செய்துவிட்டு என்னை திருமணம் செய்து கொள்வதாகவும் அவர் உறுதியளித்தார்.

ஆனால் அவரது நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதை நான் அறிந்தேன். இதனால் ரதீஷ்குமாரை கொலை செய்ய திட்டமிட்டு அவரை மருத்துவமனைக்கு வருமாறு அழைத்தேன். இந்நிலையில் ரதீஷ்குமாரிடம் பேசியபடி அவருக்கு உணவு பரிமாறி அதில் தூக்க மாத்திரையை கலந்தேன். அவர் சிறிது மயக்க நிலைக்கு சென்றவுடன் கத்தியால் அவரது உடலின் பல்வேறு இடங்களில் சரமாரியாக குத்தினேன். இதனால் ரதீஷ்குமார் துடிதுடித்து இறந்ததாக அந்த பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். இதில் ஷிபா 7 வருடங்களாக ஒரு கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து தற்போது வேலையின்றி இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |