கும்பம் ராசி அன்பர்களே, கடந்த இரண்டு நாட்களாக இருந்துவந்த அசதி, கோபம், சோர்வு யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். உடலில் வசீகர தன்மை ஏற்படும், தோற்ற பொலிவு அதிகரிக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் ஏற்படும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள்.
எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.உத்யோகத்தில் வாய்ப்புக்கள் உருவாகும். புதியவர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் கொஞ்சம் தலைதூக்கும் பார்த்து கொள்ளுங்கள்.
குடும்பத்தாரிடம் பேசும் பொழுது சலித்துக் கொண்டு பேசாமல், கலகலப்பாக பேசுவது ரொம்ப நல்லது. அதுபோலவே தொழிலில் சாதுர்யமாக பேசி காரியத்தை எளிதாக சமாளிப்பீர்கள்.பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது, உத்யோகஸ்தர்களுக்கு இன்று மறைமுக எதிர்ப்புகள் விலகி செல்லும்.
இன்று மாணவச் செல்வங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும், கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்துக்கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டும் இல்லை இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்