மதுரையில் விஜயின் 103 வயது பாட்டி ஒருவர் ஆரோக்கியமாக வசித்து வருகின்றார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகின்றார் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் விஜயின் தந்தையும் ஆவார். இந்த நிலையில் தந்தையின் பிறந்த நாள் விழாவில் விஜய் கலந்து கொள்ளாததால் நெட்டிசன்கள் பலரும் விமர்சனம் செய்தனர். மேலும் சதாபிஷேக விழாவில் விஜய் பங்கேற்காததால் பலர் விமர்சனம் செய்தார்கள். இந்த நிலையில் இது பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, நடிகர் விஜய் தற்போது ஹைதராபாத்தில் பிஸியாக ஷூட்டிங்கில் இருப்பதால் அவரால் நேரில் தன்னுடைய பிறந்தநாளுக்கு வர முடியவில்லை.
தந்தை மற்றும் மகனுக்கும் இடையே சில பர்சனல் விஷயங்கள் இருந்தாலும் அவற்றையெல்லாம் பொதுவில் கூறமுடியாது. என்னுடைய பிறந்தநாள் விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் விஜய் ஒரு மாஸ் ஹீரோ. நான் போனதுக்கே திருக்கடையூரில் நல்ல கூட்டம் விஜய் வந்திருந்தார்கள். அவர் வந்திருந்தா என்னவாகி இருக்கும். நாங்கள் சந்தோஷமாக பிறந்த நாளை கொண்டாடினோம். காதலித்து கரம்பிடித்த மனைவி ஷோபாவுடன் மனநிறைவாக பிறந்தநாளை கொண்டாடினேன் என கூறியுள்ளார்.
மேலும் ஆயுள் அதிகரிக்கும் என்பதால் அந்த கோவிலுக்கு சென்றார்களாம். எஸ்ஏசி-யின் அப்பா 89 வயது வரையும் அம்மா 96 வயதுவரையும் வாழ்ந்திருக்கின்றார்கள். மேலும் எஸ்ஏசி-யின் அம்மாவின் தங்கை மதுரையில் வசித்து வருகின்றார்கள். அவருக்கு தற்பொழுது 103 வயது ஆகின்றது. இன்றளவும் அவர் ஆரோக்கியமாக நடமாடி வருகின்றார்.