Categories
மாநில செய்திகள்

இன்று(ஜூலை 15) முதல் இரண்டு நாட்களுக்கு….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய ஆலோசனை….!!!!!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா பரவலின் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது. அதன் பிறகு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் வகுப்புகள் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டு வழக்கம்போல் வகுப்புகள் நடந்தது. இந்நிலையில் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு கடந்த ஜூன் 13-ஆம் தேதி பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மாதம் தோறும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்கும் கூட்டமானது சென்னையில் நடைபெறும்.

கடந்த 3 மாதங்களாக கூட்டம் நடைபெறாததால் தற்போது கூட்டத்தை நடத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனை கூட்டம் இன்று முதல் 2 நாட்கள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கமிஷனர் நந்தகுமார் மற்றும் இயக்குனர்கள் பங்கேற்க இருக்கின்றனர். மேலும் கூட்டத்தில் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிக அளவில் இருப்பது குறித்து விவாதிக்கப்படும் என்றும், எண்ணும் எழுத்தும் திட்டம்,‌ இல்லம் தேடி கல்வி, தற்காலிக ஆசிரியர்கள் நியமனம், ஆசிரியர்கள் இடம் மாறுதல் கவுன்சிலிங் போன்றவைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருக்கிறது.

Categories

Tech |