உடன்குடி சாலையில் நடமாடிய மன நோயாளிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள உடன்குடி பேருந்து நிலையம் பஜார் சந்திப்பு மற்றும் பஜார் வீதிகளில் மன நோயாளிகளின் நடமாற்றம் அதிகமாக இருந்த வந்தது. அவர்கள் திடீரென கூச்சலிடுவது ஓடுவதுமாக இருப்பதால் வேலைக்கு செல்லும் பெண்கள், மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுநல அமைப்பினர் நேற்று சாலைகளில் நடமாடிய மன நோயாளிகளை பிடித்து மனநல காப்பகத்தில் ஒப்படைத்தார்கள்.