தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (ஜூலை 15) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
திருப்பூர் மாவட்டம்:
அவினாசி கருவலூர் துணை மின்நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவேஇன்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை கருவலூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளையம், ஆரியக்கவுண்டம்பாளையம், அனந்தகிரி, எலச்சிப்பாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மனப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரிய காட்டுப்பாளையம், செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் வினியோகம் தடை செய்யப்படும்.
இதேபோல் கே.ஜி.பாளையம் பீடர் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. காலை 10 மணிமுதல் மதியம் 2 மணிவரை வீரபாண்டி பொதுசுத்திகரிப்பு நிலைய பகுதிகள், பொரையகவுண்டர் தோட்டம்,அம்மன் டையிங் பகுதிகளில் மின்வினியோகம் தடை செய்யப்படும்.
விருதுநகர் மாவட்டம்:
ராஜபாளையம், ஆலங்குளம் மற்றும் கோதைநாச்சியாா்புரம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூலை 15) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்செயற்பொறியாளா் திருநாவுக்கரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராஜபாளையம் உள்கோட்டத்தில் உள்ள ஆலங்குளம், கோதைநாச்சியாா்புரம், கொங்கன்குளம் ஆகிய துணை மின் நிலையங்களில் வெள்ளிக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
எனவே கோதைநாச்சியாா்புரம், தொட்டியபட்டி, அழகாபுரி, மதுரை சாலை, வ.உ.சி. நகா், சொக்கலிங்காபுரம், அய்யனாபுரம் , கலங்காப்பேரி புதூா், சாரதா நகா், எஸ். ராமலிங்காபுரம்,, வரகுணராமபுரம், ஆப்பனூா், நத்தம்பட்டி, மீனாட்சிபுரம், கம்மாப்பட்டி, அம்மன் கோவில்பட்டி, கொங்கன்குளம், ராமன்பட்டி, மேலக்கோடாங்கிபட்டி, பி. திருவேங்கிடபுரம், நதிக்குடி, ஆத்தூா், சுப்பிரமணியபுரம், மம்சாபுரம், இடையங்குளம், ரெங்கசமுத்திரபட்டி, கான்சாபுரம், பூசாரிப்பட்டி, காக்கிவாடன்பட்டி, ஆலங்குளம், ஆலங்குளம் முக்குரோடு, முத்துச்சாமிபுரம், குண்டாயிருப்பு, எதிா்க்கோட் டை, உப்புப்பட்டி, கல்லமநாயக்கா்பட்டி, கொங்கன்குளம், ராமுத் தேவன்பட்டி, வலையபட்டி, கீழாண்மைாடு, கண்டியாபுரம், எட்டக்காபட்டி, கே. லட்சுமியாபுரம், கம்மாப்பட்டி, ரெட்டியபட்டி,
ஏ. லட்சுமியாபுரம், சங்கரமூா்த்திபட்டி, தென்காசி ரோடு, பச்சமடம், காந்தி கலைமன்றம், பி.எஸ்.கே. பாா்க், சொக்கா் கோவில் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவித்துள்ளாா்.
கன்னியாகுமரி மாவட்டம்:
குழித்துறை கோட்டத்துக்கு உள்பட்ட முன்சிறை மற்றும் நடைக்காவு துணைமின் நிலைய பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஜூலை 15 காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குழித்துறை மின்விநியோக செயற்பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: முன்சிறை துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் முன்சிறை, காப்புக்காடு, மங்காடு, விரிவிளை, நித்திரவிளை, புதுக்கடை, கொல்லங்கோடு, கிராத்தூர், ஐரேனிபுரம், விழுந்தயம்பலம், பைங்குளம், தேங்காய்ப்பட்டணம், ராமன்துறை ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின்நிலையத்திலிருந்து மின்விநியோகம் இருக்காது.
இதே போன்று நடைக்காவு துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்படும் சூரியகோடு, குளப்புறம், சுந்தரவனம், வாறுதட்டு, குழிவிளை, கோழிவிளை, கோனசேரி, சாத்தன்கோடு, வாவறை, மணலி, பாலவிளை, வளனூர், சூழால், பாத்திமாநகர், மெதுகும்மல், வெங்கஞ்சி ஆகிய இடங்களுக்கும் அவற்றைச் சார்ந்த துணை கிராமங்களுக்கும் மேற்படி துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் இருக்காது.
மேற்குறிப்பிட்ட நேரத்தில் மின்பாதைகளில் பராமரிப்பு பணிகள் மற்றும் மின்கம்பங்களுக்கும், மின் பாதைகளுக்கும் இடையூறாக இருக்கும் மரக்கிளைகள் அகற்றும் பணிகள் நடைபெறுவதால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை
சென்னையில் இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக ஐ.டி கோரிடர், ஆவடி ஆகியதுணைமின் நிலையங்களில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
ஐ.டி கோரிடர் பகுதி: தரமணி – சி.பி.ஐ காலனி, கோவிந்தசாமி நகர், கற்பக விநாயகர் கோவில் தெரு, சேரன் செங்குட்டுவன் தெரு, பெருங்குடி – லஷ்மன் நகர், பெரியநாயகி தெரு, கருணாநிதி தெரு, சோழன் நகர் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.
ஆவடி பகுதி∶ மிட்டனமல்லி – மிட்டனமல்லி கண்டிகை, ஐ.சி.எஃப் காலனி, பெரியார் நகர், பருத்திப்பட்டு காமராஜ் நகர் – பாண்டியன் நகர், லக்ஷ்மி நகர், மூர்த்தி நகர், அமிதி பருத்திபட்டு மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள்.