செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு என்ற பகுதியில் ராதாகிருஷ்ணன் என்ற 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி வருகிறார். அவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் நிலையில், அண்மை காலமாக அவ தங்கியிருந்த வீட்டில் மர்மன் அவர்கள் சுவர் ஏறி குதித்து வந்து போன தடம் பதிவாகியுள்ளது.
அதனால் திருடர்கள் வந்து போகிறார்கள் என கருதிய இராதாகிருஷ்ணன் வீட்டிலிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தார். அதில், அவர் தங்கி இருந்த வீட்டின் உரிமையாளரும், செங்கல்பட்டு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர்கள் ஆன கனகசபாபதி மற்றும் அவரது மனைவி கீதா ஆகிய இருவரும் வீட்டில் சுவர் ஏறி குதித்து படுக்கையறையை ஒட்டி கேட்பது மற்றும் கழிவறையை எட்டிப் பார்ப்பது போன்ற அநாகரிக செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உரிமையாளரிடம் கேட்டபோது அவர் தரகுறைவான தகாத வார்த்தைகளால் திட்டியும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் போலீசில் புகார் அளிக்க, சிசிடிவி காட்சிகளை ஆராய்ச்சி செய்து உண்மையை கண்டறிந்த போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள். மாணவர்களுக்கு ஒழுக்கத்தை கற்றுத் தருகின்ற அரசு பள்ளி ஆசிரியர் தம்பதிகளே இது போன்ற ஒழுக்கமற்ற செயல்களில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.