மேஷம் ராசி அன்பர்களே..!! இன்று உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். சகோதர வழியில் ஆதாயம் கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலன் கொடுக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் தொல்லை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவி செய்வார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாளாக இன்றைய நாள் இருக்கும். உங்களின் பொருட்களை மட்டும் இன்று நீங்கள் கவனமாக பாதுகாத்துக் கொள்வது ரொம்ப நல்லது.
வாகனத்தில் செல்லும் பொழுதும் ஆயுதம் நெருப்பு போன்றவற்றைக் கையாளும் பொழுதும் கவனமாக இருங்கள். தொழில் வியாபாரம் தொடர்பாக சின்னச்சின்ன அலைச்சல்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை அனுப்பும் பொழுது கொஞ்சம் பாதுகாப்பாக அனுப்புவது நல்லது. இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் கடினமாக உழைத்து பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். படித்த பாடத்தை எழுதிப்பாருங்கள், சந்தேகம் ஏதேனும் இருப்பின் ஆசிரியரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: 4 மற்றும் 5
அதிஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் இளம் பச்சை
ரிஷபம் ராசி அன்பர்கள்…!! பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்து சேரும். புதிய வேலை வாய்ப்புகள் அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பு கொடுப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவு கொடுப்பார்கள். வரவேண்டிய பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் மட்டும் திடீரென குழப்பங்கள் வந்து செல்லும்.
கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் கொஞ்சம் ஏற்படலாம் எதையும் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. பிள்ளைகள் மீது அக்கறை காட்டுவீர்கள் நண்பர்கள் உறவினர்கள் மூலம் நன்மை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளுவின் காரணமாக அலைய வேண்டி இருக்கும். மாணவச் செல்வங்களுக்கு இன்று கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இருந்தாலும் படித்த பாடத்தை ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பாருங்கள் ரொம்ப சிறப்பாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடியதாகவே இருக்கும் அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியம் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஊதா நிறம்
மிதுனம் ராசி அன்பர்கள்..!! இன்று குடும்பத்தில் உங்கள் கை ஓங்கி நிற்கும். ஆடம்பர செலவுகளை மட்டும் தயவுசெய்து குறைத்து சேமிக்கத் தொடங்குங்கள். நட்பால் ஆதாயம் ஓரளவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் புதிய அதிகாரிகள் உங்களை மதிக்க கூடும். புத்திக்கூர்மையுடன் செயல்படுவீர்கள். தைரியம் உண்டாகும். செலவு கொஞ்சம் கட்டுக்கடங்காமல் இன்று செல்லும். வேண்டியவர்களுடன் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்து செல்லும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சற்று கூடுதலாக தான் உழைக்க வேண்டி இருக்கும்.
கடன் பிரச்சினைகளைப் பொறுத்தவரை கட்டுக்குள் இருக்கும். போட்டிகளும் எதிர்ப்புகளும் நீங்கிச் செல்லும். உங்களை பார்த்து மற்றவர்கள் பொறாமைப்படும் அதை நீங்கள் கவனத்தில் கொள்ளுங்கள். இன்று யாருக்கும் பஞ்சாயத்துக்கள் மட்டும் ஏதும் பண்ண வேண்டாம். இன்று மாணவர்கள் கல்விக்காக கடினமாக உழைப்பார்கள் நல்ல முன்னேற்றத்தையும் அதுபோலவே அடைவார்கள். முடிந்தால் படித்த பாடத்தை மட்டும் ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பார்ப்பது சிறப்பாக இருக்கும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்து காரியமும் சிறப்பாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 4
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறம்
கடக ராசி அன்பர்களே..!! இன்று பண புழக்கம் அதிகரிக்கும் நாளாகவே இருக்கும் உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள் பற்று வரவு உயரும் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். வெளி தொடர்புகளில் எச்சரிக்கை இருக்கட்டும்.
இன்று எதிர் பார்த்த பணம் கிடைக்கும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது சிறப்பு.மாணவர்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களை அவ்வப்போது போக்கிக் கொள்வது மிகவும் நல்லது. திட்டமிட்டு செயலாற்றுவது முன்னேற்றத்திற்கு உதவும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்களின் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியம் சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்டமான திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் :2 மற்றும் 1
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் மஞ்சள்
சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று குடும்பத்தில் பல விஷயங்களை நீங்களே பார்க்க வேண்டி இருக்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்த சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் பணிகளால் உங்களுக்கு டென்சன் ஏற்படும். அதிகாரிகள் குறைக் கூறுவார்கள். உங்களுடைய எதிர்பார்ப்புகள் இன்று தாமதமாகத்தான் நிறைவேறும்.
பல பிரச்சினைகளிலிருந்து எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு சாதகமான பலன் ஓரளவு ஏற்படலாம். எதிலும் கூடுதல் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்யோகம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பேசும் பொழுது நிதானத்தை கடைபிடித்தால் நன்று. இன்று மாணவச் செல்வங்கள் கொஞ்சம் சிரமம் எடுத்து பாடங்களைப் படியுங்கள். படித்தபின் தயவு செய்து எழுதி பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்க கூடியதாகவே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அனைத்து காரியம் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிஷ்டமான திசை: கிழக்கு
அதிஷ்ட எண் : 2 மற்றும் 4
அதிஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் நீலம்
கன்னி ராசி அன்பர்களே…!! இன்று குடும்பத்தில் எதிர் பாராத செலவுகள் வந்து செல்லும். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்த கூடும். சிறுசிறு அவமானங்கள் வந்துசெல்லும். கூடுமானவரை இன்று நீங்கள் பேச்சை மட்டும் குறைத்துக் கொள்வது மிகவும் நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் ஏற்படும். உத்யோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி இருக்கும். பதறாமல் பக்குவமாக செயல்படுங்கள். இன்று அக்கம்பக்கத்தினர் உடன் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.
உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். மேல் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். சக ஊழியர் மத்தியில் இருந்த எதிர்பார்ப்புகள் விலகிச் செல்லும். பெண்கள் கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். மற்றவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தயவு செய்து தவிர்த்து விடுங்கள். கோபத்தை தவிர்ப்பது இன்று மிகப் பெரிய நன்மையை கொடுக்கும். மாணவச் செல்வங்கள் பொறுமையாக இருந்து பாடங்களைப் படியுங்கள். படித்த பாடத்தை கவனமாக எழுதிப்பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்
துலாம் ராசி அன்பர்களே, இன்று தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும்.
உடல் ஆரோக்கியம் மனதில் உற்சாகத்தை கொடுக்கும். போது ஏதாவது சிறு சிறு தடங்கல் ஏற்பட்டு நீங்கும். வாகனம் மூலம் நல்ல லாபத்தை ஈட்டுவீர்கள். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பல விதத்தில் இன்று பணம் வரக்கூடும். என்றும் மற்றவர்கள் பிரச்சனைகள் தொடர்பாக தேவையான உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
தொழில் வியாபாரம் தொடர்பாக இன்று செலவுகள் கூடும். தேவையான நேரத்தில் பணம் கிடைப்பதும், புதிய ஆர்டர்கள் கிடைப்பதிலும் கொஞ்சம் தாமதம் ஏற்படும். தொழில் தொடர்பாக இன்று கொஞ்சம் அலைய வேண்டியிருக்கும். இன்று மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ஆசிரியரின் முழு ஒத்துழைப்பு இருக்கும்.
இன்று ஆசிரியர்களிடம் சந்தேகம் ஏதும் இருப்பின் எழுந்து நின்று கேட்டு கொள்ளுங்கள்.இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும்.
அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்ல படியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை:மேற்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் இளம் பச்சை
விருச்சிக ராசி அன்பர்களே, இன்று எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிக்க வேண்டி இருக்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் புதிய முடிவு செய்யலாம் என்று சிந்தனை மேலோங்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்வது சிறப்பு.
வியாபாரம் செய்ய தேவையான பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், உறவினர்களின் வருகை இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். நிலம் ,வீடு மூலம் உங்களுக்கு நல்ல லாபம் கிடைக்கப் பெறுவீர்கள்.
கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மன தைரியம் ககூடும். உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு உழைப்பு மற்றும் துணிச்சல் கூடும். இன்று மாணவர்கள் கல்விக்காக கடுமையாக உழைத்து தான் படிக்க வேண்டியிருக்கும்.
எதிர்பாராத வகையில் சில நண்பர்களை நீங்கள் சந்திக்கக்கூடும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் வெள்ளை நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை
தனுசு ராசி அன்பர்களே, இன்று நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். இன்று உடன்பிறந்தவர்கள் ரொம்ப பாசமாக நடந்து கொள்வார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை இன்று பைசல் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் கூறுவார்கள். விபரித ஆசைகள் மட்டும் இன்று இருக்கும், கவனம் இருக்கட்டும்.
உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு சின்ன விஷயத்திற்காக கூட அலைய வேண்டியிருக்கும். பணிச்சுமை காரணமாக திடீர் கோவம் கொஞ்சம் உண்டாகலாம். பெண்களுக்கு மற்றவர்கள் செயல்களால் திடீர் கோபம் ஏற்படும் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
வீண் செலவை மட்டும் தயவு செய்து கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு போட்டிகள் விலகிச்செல்லும் , பாடங்களில் கவனம் செலுத்துங்கள், விளையாட்டுத் துறையில் வெற்றி வாய்ப்புக்கள் ஏற்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,
ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவிலே இருக்கும். அது மட்டும் இல்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் ஊதா
மகரம் மகரம் ராசி அன்பர்களே, இன்று கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் முற்றிலும் விலகிச் செல்லும். புது முடிவுகளை எடுக்க கூடும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். பண வரவு ரொம்ப சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்களை பார்த்து வியக்க கூடும்.
அவரிடம் இருந்து உங்களுக்கு உதவிகளும் கிடைக்கும். மனநிறைவு ஏற்படும் நாளாகத்தான் இன்றைய நாள் இருக்கும். தேவையற்ற பிரச்சனைகளை மட்டும் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டியிருக்கும். தேவையான உதவிகள் தாமதமாக வந்து சேரும்.
வீண் கனவுகள் தோன்றும், திடீர் கோபங்கள் தலைதூக்கும் மிகவும் கவனமாக பேசுவது நன்மையை கொடுக்கும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லுங்கள், கவலை வேண்டாம். சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கையும் இன்று உங்களுக்கு ஏற்படும்.
இன்றைய நாள் காதல் கைகூடும் உணவாகவும் இருக்கும் என்று மாணவச் செல்வங்களுக்கு கல்வியில் சிறுசிறு தடைகள் வந்து செல்லும் கவலை வேண்டாம் அதை வெற்றிகரமாகவே நீங்கள் முறியடிப்பீர்கள். முடிந்தால் ஆசிரியரிடம் ஏதேனும் சந்தேகம் இருப்பின் கேட்டு தெரிந்து கொள்வது ரொம்ப நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவிலேயே இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் ரொம்ப நல்லபடியாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: இரண்டு மற்றும் நான்கு
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் வெள்ளை நிறம்
கும்பம் ராசி அன்பர்களே, கடந்த இரண்டு நாட்களாக இருந்துவந்த அசதி, கோபம், சோர்வு யாவும் நீங்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்கும்.இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். உடலில் வசீகர தன்மை ஏற்படும், தோற்ற பொலிவு அதிகரிக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் ஏற்படும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள்.
எதிர்பார்த்த பண உதவியும் கிடைக்க பெறுவீர்கள். வேலை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.உத்யோகத்தில் வாய்ப்புக்கள் உருவாகும். புதியவர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற பிரச்னைகள் கொஞ்சம் தலைதூக்கும் பார்த்து கொள்ளுங்கள்.
குடும்பத்தாரிடம் பேசும் பொழுது சலித்துக் கொண்டு பேசாமல், கலகலப்பாக பேசுவது ரொம்ப நல்லது. அதுபோலவே தொழிலில் சாதுர்யமாக பேசி காரியத்தை எளிதாக சமாளிப்பீர்கள்.பொதுவான காரியங்களில் ஈடுபடும் போது கவனமாக இருப்பது நல்லது. வாகனங்களை பயன்படுத்தும்போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது, உத்யோகஸ்தர்களுக்கு இன்று மறைமுக எதிர்ப்புகள் விலகி செல்லும்.
இன்று மாணவச் செல்வங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும், கல்வியில் இருந்த தடைகள் விலகி செல்லும். இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்துக்கொண்டு செல்லுங்கள், சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவிலே இருக்கும். அதுமட்டும் இல்லை இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்
மீனம் ராசி அன்பர்களே, இன்று கோவத்தை கட்டுப் படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள்.பிள்ளைகளின் பொறுப்புகளை உணர்ந்து கொண்டு அதிகமாக அவர்களுக்காக செயல்படுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவரின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள்.
உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் மெத்தனமான போக்கு காணப்படும்.வாடிக்கையாளர்களிடம் கோபமான வார்த்தைகளை பேசாமல், சாந்தமாக உரையாடுவது வியாபார விருத்திக்கு சிறப்பாக இருக்கும். பண வரவு ஓரளவு இன்று சிறப்பாகத்தான் இருக்கும்.
செலவு கொஞ்சம் கூடும். குடும்பத்தில் இருப்பவர்களை மட்டும் தயவு செய்து அனுசரித்துச் செல்லுங்கள். வாழ்க்கை துணையின் உடல் நிலையில்,கொஞ்சம் அக்கறையாக இருங்கள். இன்று பொது காரியங்களில் ஈடுபடும்பொழுது ரொம்ப கவனமாக இருக்க வேண்டும்.
இன்று உடலில் வசீகரத் தன்மை கூடும். காதலில் பயப்படக்கூடிய சூழல் நிலவும. அது போலவே திருமண முயற்சியும் வெற்றி பெறும் முயற்சியாகவே அமையும். இன்று மாணவ செல்வங்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்து பாடங்களை படியுங்கள், பாடங்களில் மட்டும் கவனத்தை செலுத்துங்கள், பாடத்தை தயவுசெய்து எழுதிப் பாருங்கள்.
இன்று முக்கியமான பணியை மேற்கொள்ளும் போது மஞ்சள் நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்அது மட்டுமில்லாமல் இன்று சித்தர்கள் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஊதா