Categories
மாநில செய்திகள்

“தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசருக்கு….. கொரோனா தொற்று உறுதி”….. அதிர்ச்சியில் அரசியல் வட்டாரங்கள்….!!!!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் நாசர் தனிமைப்பட்டுத்திக் கொண்டுள்ளார். இது குறித்து அமைச்சர் நாசர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்: “இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக கொரோனா தொற்று பாதித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அமைச்சர் ஒருவருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது சக அமைச்சர்கள், அதிகாரிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முகக்கவசம் கட்டாயம் அணியவும், சமூக இடைவெளியை பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அரசியல் தலைவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவது அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |