கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பானது அதிகரித்து வந்தது. இந்த கொரோனா வைரஸ் தொற்றால் தினந்தோறும் 1000 பேர் பாதிக்கப்பட்டனர். கடந்த ஒரு வாரமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2000-த்திலிருந்து 3000-ஆக அதிகரித்து வந்தது. கடந்த 8-ம் தேதியில் இருந்து தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் புதிதாக 2283 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், சென்னையில் இன்று 682 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 2707 பேர் டிஸ்ஜார்ஜ் ஆகி வீட்டிற்கு சென்றுள்ளனர். அதன் பிறகு 17,583 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் உயிரிழப்புகள் ஏதும் இல்லாத நிலையில், வைரஸ் பாதிப்பு குறைந்து வருவது பொதுமக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.