Categories
மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்…. மீன்வளத் துறையில் வேலை வாங்குவதாக கூறி ரூ.4 லட்சம் அபேஸ்… போலீஸ் விசாரணை….!!!!

சேலம் கன்னங்குறிச்சி மெயின் ரோட்டில் ஜெகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் சதீஷ்(39). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக வேலை புரிந்து வருகிறார். கடந்த 2015 ஆம் ஆண்டு கொங்கணாபுரத்தை சேர்ந்த சண்முகம் என்பவர் ஜெகநாதன் மூலம் அவருடைய மகனுக்கு அறிமுகமானார். அப்போது மீன்வளத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி அவரிடமிருந்து ரூ.4,50,000 அவர் பெற்றுக் கொண்டார். ஆனால் இதுவரை அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இது குறித்து சங்ககிரி துணை போலிஸ் சூப்பிரண்டு ஆரோக்கியராஜிடம் சதீஷ் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் சண்முகத்தை அழைத்த துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை நடத்தினார். அப்போது அவர், சதீசுக்கு ரூ.50,000 கொடுத்துவிட்டதாகவும் மீதமுள்ள ரூ.4 இலட்சத்தை 10 நாட்களில் கொடுத்து விடுவதாக சண்முகம் தெரிவித்தார்.ஆனால் குறிப்பிட்ட நாளில் சதீஷ்க்கு பணம் அவர் கொடுக்கவில்லை. இது குறித்து அவரிடம் கேட்டபோது தர முடியாது என்று திமிராக கூறியுள்ளார். இதனையடுத்து கொங்கணாபுரம் போலீஸ் நிலையத்தில் சதீஷ் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் சண்முகம் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |