அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தலை தூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக இருக்கிறது. அதனைதொடர்ந்து கடந்த 11ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை பொதுகுழு உறுப்பினர்கள் தேர்வு செய்தனர். மேலும் அடுத்த நான்கு மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கட்சியின் நலனுக்காக எதிராக செயல்பட்டதாக கூறி ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ஒ.பி. ரவீந்திரநாத், ஓ.பி. ஜெயபிரதீப், வைத்தியலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர், மனோஜ் பாண்டியன் ஆகியோரை அதிமுக அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பேசிய ஓ. பன்னீர்செல்வம் அதிமுக சட்ட விதிகளின்படி எடப்பாடி பழனிச்சாமியின் உத்தரவுகள் செல்லாது என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில் வருகின்ற 28ஆம் தேதி செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வர இருக்கிறார். அப்போது அவரை நேரில் சந்தித்து பேச ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது சாதி ரீதியாக அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் பிளவுபடுத்தி விட்டதாகவும், அதிமுக நெருக்கடி குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் முறையிட ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது. எப்போது ஒ.பன்னீர்செல்வத்திடம் இணக்கம் காட்டும் பிரதமர் நரேந்திர மோடி இந்த முறை அவருக்கு நல்ல செய்தி சொல்வார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு பதிலடி தரும் வகையில் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி தரப்பும் தயாராகி வருவதாக பசும வழிச் சாலை வட்டாரங்கள் கூறுகின்றது.