ஈரோடு மாவட்ட சத்தியமங்கலத்தை அடுத்த வனப்பகுதியில் தேங்குமரஹடா, கள்ளம்பாளையம், அல்லிமாயாறு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் மாயாற்றை பரிசிலில் கடந்து தான் பவானி சங்கர், சத்தியமங்கலம் மற்றும் வெளியூருக்கு செல்ல முடியும். ஆனால் மழை நேரங்களில் மாயாற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இது போன்ற நேரங்களில் ஆபத்தை உணராமல் பரிசிலினில் பயணம் செய்து வருகின்றனர். இந்நிலையில் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
இதன் காரணமாக தெங்குமரஹடா, கள்ளம்பாளையம், அல்லியாறு பகுதி சேர்ந்த பொதுமக்கள் ஆபத்து உணராமல் பரிசிலில் மாயாற்றை கடந்து சென்று வருகின்றனர். மாயாற்றை கடக்க பாலத்தை கட்டிக் கொடுக்க பல ஆண்டுகள் கோரிக்கை வைத்து இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இது குறித்து மக்கள் கூறுவது, வெள்ளம் வரும் நேரத்தில் இந்த கிராமங்களில் ஏதாவது இறப்பு நேரிட்டால் உடலை மாயாற்றில் போராடிக் கொண்டு போக வேண்டிய நிலைதான் இன்னும் உள்ளது. மேலும் இந்தியா வளர்ச்சியை நோக்கி சென்றாலும் எங்கள் வன கிராமம் இன்னும் நூறு ஆண்டுகளுக்கு பின் தங்கி தான் உள்ளது என்று அந்த கிராம மக்கள் கவலை தெரிவித்தனர்.