Categories
தேசிய செய்திகள்

ஜூலை 18 முதல் அமல்…. இதெல்லாம் விலை உயரப்போகுது…. முழு லிஸ்ட் இதுதான்…. அதிர்ச்சி தகவல்….!!!!

சமீபகாலமாக பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. இதற்கு முக்கிய காரணம் பணவீக்கம் தான். இந்நிலையில் சில அத்தியாவசிய பொருட்கள் மீதான விலை மேலும் உயரக்கூடும் என்றும் விரைவில் அது அமலுக்கு வருவதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதில் பால், தயிர், பன்னீர் போன்ற பால் பொருட்கள், அரிசி, கோதுமை, தானியங்கள், அப்பளம், இறைச்சி மற்றும் மீன் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையும் உயருகிறது.

இதற்கான காரணம் என்னவென்றால்,சமீபத்தில் நடந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பேக்கேஜ் செய்யப்பட்ட மற்றும் பிராண்டிங் செய்யப்பட்ட பால், தயிர், மோர், சீஸ், லிஸ்ஸி, பன்னீர், அரிசி, கோதுமை மாவு, தானியங்கள், தேன், அப்பளம், வெள்ளம்,இறைச்சி மற்றும் மீன் ஆகியவற்றிற்கு 5 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்க முடிவெடுக்கப்பட்டது. இந்த ஜிஎஸ்டி வருகின்ற ஜூலை 18-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதனால் ஜூலை பதினெட்டாம் தேதி முதல் மேற்கூறிய பொருட்களின் விலை உயரும் என்று தகவல் வெளியாகி உள்ளது.இந்த ஐந்து சதவீத ஜிஎஸ்டி வரி பேக்கேஜி செய்யப்பட்ட மற்றும் பிராண்டிங் செய்யப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • பேக்கேஜிங் மற்றும் பிராண்டிங் செய்யப்பட்ட பால், தயிர், மோர், பனீர், லஸ்ஸி, அரிசி, கோதுமை மாவு, தானியங்கள், அப்பளம், வெல்லம், இறைச்சி, மீன் ஆகியவற்றுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
  • வங்கிகள் விநியோகிக்கும் காசோலைப் புத்தகத்துக்கான (Cheque Book) கட்டணத்துக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
  • மருத்துவமனைகளில் ஒரு நாளுக்கு 5000 ரூபாய்க்கு மேல் வாடகை வசூலிக்கப்படும் அறைகளுக்கு 5% ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
  • இதுபோக வரைபடங்களுக்கு (Maps) 12% ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
  • ஒரு நாளைக்கு 1000 ரூபாய்க்கு கீழ் வாடகை வசூலிக்கப்படும் ஹோட்டல் அறைகளுக்கு 12% ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
  • LED பல்புகள் மற்றும் லைட்டுகளுக்கு 18% ஜிஎஸ்டி விதிக்கப்படும்.
  • பிளேடு, கத்திரிக்கோல், பென்சில் ஷார்ப்னர், ஸ்பூன், ஃபோர்க், ஸ்கிம்மர், கேக் சர்வர் பொன்ற பொருட்களுக்கான ஜிஎஸ்டி 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Categories

Tech |