இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது கடன்களுக்கான MCLR வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. MCLR வட்டி என்பது கடன்களுக்கு விதிக்கப்படும் அடிப்படை வட்டி. இதனை உயர்த்துவதன் மூலமாக கடன் வாங்கியோருக்கு மொத்த விகிதம் உயரக்கூடும். அதன் விளைவாக கடனை வாங்கி செலுத்தி வருவோரின் இஎம்ஐ கட்டணமும் உயரும். புதிதாக கடன் வாங்குவோர் மற்றும் ஏற்கனவே கடன் வாங்கி கடனை திருப்பி செலுத்துவோர் என இரு தரப்பினருக்கும் இஎம்ஐ கட்டணம் உயரக்கூடும்.
இந்நிலையில் எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மூன்று மாதங்கள் வரையிலான கடன்களுக்கு MCLR வட்டி விகிதம் 7.15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. 6 மாத கடன்களுக்கு MCLR வட்டி விகிதம் 7.45 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு வருடத்திற்கு 7.5 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் இரண்டாவது முறையாக எஸ்பிஐ வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக வீட்டுக் கடன், கார்க்கடன், தனிநபர் கடன் மற்றும் வாகன கடன் போன்ற கடன்களுக்கான EMI கட்டணம் உயரும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.